200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள்கள் தேனில் உள்ளன. இதிலிருந்தே தேனின் மகத்துவத்தை நாம் அறியலாம். அதாவது ஒன்றரை கிலோ மாமிசம், மற்றும் ஒன்றே கால் லிட்டர் பால் அளவிற்கு 200 கிராம் தேனில் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இது ஆச்சர்யம் கலந்த உண்மை.
மருத்துவ குணங்கள்:
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு.
தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது.
தினமும் வெறும் வயிற்ட்ருடன் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதர்க்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை எடுத்து கொண்டு ஆறிய சுடுதண்ணியுடன் அதை கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
தேனுடன் வெங்காய சாரைதேன் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது ,
இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிர் வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது
எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலை வல சரியாகும் .( மருத்துவ குணங்கள் )
கண்பார்வை பிரகாசமாக தெறிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வரவேண்டும். தேனுடன் முட்டை மற்றும் பாலை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்
மலைகளிலும்,
மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும்.
தேன் சாப்பிடுவதால் இரத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. குடல்புண்கள், ஜூரம், இருமல், இருதய நோய்கள் போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம், சீதிபேதி போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
வயிற்றைச் சுத்தப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. இதிலுள்ள பொட்டாஷியம் மூட்டு வலையைப் போக்குகிறது.
வயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று உபாதைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
தூக்கத்தைத் தூண்டும் தேன்:
குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக் கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும்.
தேன் தேனீக்கு மட்டுமல்ல.. மனிதனுக்கும் சிறந்த உணவாகவும்,
மருந்தாகவும் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். அதோடு இரத்த நாளங்களிலும், குடலிலும் சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
தேன் சிறுநீர் அடைப்பை நீக்கும்
தேன் மலச்சிக்கலை குணப்படுத்தும்
கபத்தால் ஏற்படும் இருமல் போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த நிவாரணி.
இளம்சூடான பாலில் சிறிதளவு தேன்கலந்து பருகினால் உறக்கம் உங்களைத் தழுவும்.
பெரும்பாலான மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கிய மருந்துப்பொருளாக சேர்க்கப்பட்டிருக்கும்.
தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.
எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.
ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.
நெல்லிக்காயுடன் தேன் கலந்து சாப்பிட 'இன்சுலின்' சுரக்கும்.
கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.
தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.
கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
இருமலுக்கு
இரவில் தூங்கவிடாமல் தொடர்ந்து வரும் இருமலுக்கு மிளகு பொடியில் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் வெகுவாக குறைந்து நிம்மதியாக தூங்கலாம்.
இருமலுக்கு
இரவில் தூங்கவிடாமல் தொடர்ந்து வரும் இருமலுக்கு மிளகு பொடியில் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் வெகுவாக குறைந்து நிம்மதியாக தூங்கலாம்.
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
ஆஸ்துமா
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்
இரத்த கொதிப்பு
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
இதயத்திற்கு டானிக்
அனைஸ் பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.
தேனீக்கள் பற்றிய சிறப்புத் தகவல்கள்:
மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது தேனீக்கள்.
புயல் வருவதை முன்கூட்டியே உணரும் சக்தி தேனீக்கு உண்டு.
தேன் எடுக்கப் போகாத தேனீ ஆண் தேனீ.
ஒரு கிலோ தேனுக்கு ஆறு லட்சத்து அறுபத்தெட்டாயிரம் பூக்களை தேனீக்கள் சந்திக்கின்றன.
தேனீக்களின் எச்சமே நாம் சுவைக்கும் தேன்.
ஒரு தடவை கொட்டியவுடன் தேனீ தனது கொடுக்கை இழந்துவிடும்.
தேனீ ஒரு சைவ உண்ணி
ஐந்து கண்களைக் கொண்டது தேனீ. எனவே தேனீயின் பார்வை மிக கூர்மையாக இருக்கும்.
தேனீக்களுக்கு இரைப்பைகள் இரண்டு.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான தேனீக்கள் உண்டு.
தேனீக்கள் வாழும் கூடுகள் அதனுடைய தேன்மெழுகினால் ஆனவையே.
தேனீக்கள் மூன்று வகைப்படும். (ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ, இராணித் தேனீ)
ஏராளமான நுண்ணறைகள் கொண்டது தேன்கூடு. மூன்று வகை தேனீக்களும் தனித்தனி அறைகளிலேயே வாழும்.
ஒரு சொட்டுத் தேனை சேகரிக்க தேனீக்கள் பதினாறு மைல்தூரம் கூட பறந்து செல்கிறது.
மரத்தின் கிளை, கரடு முரடான பாறை இடுக்குகள் ஆகியவை தனக்கு ஏற்ற உறைவிடமாக(இருப்பிடமாக) தேனீக்கள் தேர்ந்தெடுக்கின்றன. தேனீக்களில் ராணித் தேனீயே அனைத்து முட்டைகளையும் இடுகின்றது
தேனீயின் உடலில் 12 வளையங்கள் உள்ளன.
தேனீ நிமிடத்திற்கு அதிக பட்சமாக 400 முறை இறக்கையை அசைக்கும்.
எறும்பு இனத்தைச் சேர்ந்தது தேனீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக