இயற்கை உணவை நினைவூட்டவே இந்த பதிவு.
முதலில் மிகவும் எளிய கனி. பார்த்த உடன் நாவில் நீர் ஊறவைக்கும் கனி.
இளமையை தரும் கனி. நீரழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படும் கனி. ஒரு ஆப்பிள்
பழத்திற்கு இணையான சத்துக்களைக் கொண்ட கனி. ஏழைகளின் ஆப்பிள் என செல்லமாக
அழைக்கப்படும்நெல்லிக்கனியின் மருத்துவ பயன்களைப் பார்க்கலாம். வெவ்வேறு மொழிகளில் நெல்லிக்கனிக்கு வழங்கப்படும் பெயர்கள்.
தமிழ் -நெல்லிக்காய்
சமஸ்கிருதம் -அமலிகா
ஹிந்தி -ஆம்லா
குஜராத்தி -ஆம்லா
மலையாளம் -நெல்லிக்கா
கன்னடம் -நெல்லி
விட்டமின் 'சி' சத்து அதிக அளவில் உள்ளது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கும், கண்களை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் லெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. எனவே இதனை வெயிலில் காயவைத்தாலும் இதிலுள்ள விட்டமின் சத்து குறையாது. மாறாகக் கூடவே செய்யும். நம் உடலில் தினந்தோறும் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் அத்தியாவசியமான காரணிகளுடன் இணைந்து நோயைத்தரக் கூடிய ஆக்சிஜன் அயனிகள் ஃப்ரீரேடிக்கல்ஸ் எனப்படுகின்றன.இவை உடலில் தேங்கினால் மாரடைப்பைஉருவாக்கும் தன்மை உடையவை. மேலும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்ஆற்றல் படைத்தவை.முதுமைக்கும் சில நேரங்களில் புற்று நோய்க்கும் வழிவகுக்கிறது. இந்த ஃப்ரீ ரேடிகல்ஸை உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு.
நெல்லிக்காயின் மருத்துவ நலன்கள்:
1.தலைமுடி கருத்து நீண்டு வளர உதவுகிறது.2.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
3.கல்லீரல் வேலை செய்ய உதவுகிறது.
4.ஞாபக சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.
5.இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
6.நகம், பல் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.
7.முகச்சுருக்கத்தைக் குறைத்து இளமைத்தோற்றத்தைத் தருகிறது.
8.இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக்
குறைக்கிறது. இதன் மூலம் நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எனக்கு மிகவும் பயன் தருவதாக இருந்தது இந்த தகவல். இப்பொழுது நான் தினமும் பெரிய நெல்லிக்கயை சாப்பிடலாம் என்று இருக்கிறேன்.தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்கு