|
வார்த்தைகள்
|
பொருள்
|
|
அ
|
அந்த; அழகு; கடவுள்
|
|
அஃகம்
|
தானியம்; ஊறுநீர்; முறைமை
|
|
அஃகாமை
|
குறையாமை; சுருங்காமை
|
|
அஃகான்
|
அ என்னும் எழுத்து
|
|
அஃகுதல்; அஃகல்
|
குறைதல்; சுருங்குதல்;
நுணுகுதல்; வற்றுதல்; கழிதல்
|
|
அஃகேனம்
|
ஆயுத எழுத்து(ஃ); முள்ளில்லா பன்றி
|
|
அஃதன்று; அஃதான்று
|
அ
துவுமின்றி
|
|
அஃது
|
அது
|
|
அஃதை
|
அகதி; கதியிலி;
திக்கற்றவர்
|
|
அஃபோதம்
|
நிலாமுகிபுள்; சகோரம்;
புறா
|
|
அஃறிணை
|
உயர்திணை அல்லாதவை;
மக்கள், தேவர், நரகர் அல்லாத பொருள்
|
|
அக்கக்காய்
|
துண்டுதுண்டாய்;
தனித்தனியாய்
|
|
அக்கச்சி; அக்காச்சி
|
அக்காள்; தமக்கை
|
|
அக்கசாலை
|
கம்மியர் தொழிற்சாலை;
நாணயச்சாலை
|
|
அக்கட
|
அவ்விடம்
|
|
அக்கடா
|
ஓய்வைக் குறிக்கும் சொல்;
எது பற்றியும் கவலையின்மை
|
|
அக்கடி
|
அலைவு; பயணத்தொல்லை
|
|
அக்கணா
|
தான்றிமரம்
|
|
அக்கதம்; அக்கதை
|
பார்க்க; அட்சதை
|
|
அக்கதாரி
|
சிவபெருமான்
|
|
அக்கந்து
|
தூற்றுகையில்
தானியங்களின் பக்கத்தில் திரளும் பதர்
|
|
அக்கப்பறை
|
அலைந்து திரிகை
|
|
அக்கப்பாடு
|
நிலையளிழிவு; குழப்பம்; அல்லோல
கல்லோலம்; பொருள் அழிவு
|
|
அக்கப்போர்
|
அலப்புதல்;
வம்புப்பேச்சு; கலகம்; தகராறு
|
|
அக்கம்
|
தானியம்; பொன்; கண்; உருத்திராக்கம்;
பாம்பு; கயிறு; பக்கம்
|
|
அக்கம்பக்கம்
|
அண்டைஅயல்;
முன்னும்பின்னும்; அண்மைச்சூழல்
|
|
அக்கமணி
|
உருத்திராக்க மணி
|
|
அக்கமாலை; அக்கவடம்
|
உருத்திராக்க மாலை;
செபமாலை
|
|
அக்கர(ரா)காரம்
|
மருந்துவேர்; மருந்துப்
பூண்டு
|
|
அக்கரம்
|
எழுத்து; அழியாதது;
மாமரம்; வெள்ளெருக்கு; வாய்நோய்
|
|
அக்கரன்
|
அழிவில்லாதவன்; எங்கும்
நிறை பொருள்; கடவுள்
|
|
அக்கரை
|
எதிர்க்கரை; மறுகரை
|
|
அக்கரைச்சீமை
|
கடல் கடந்த நாடு
|
|
அக்கரைப்பச்சை
|
பொய்த்தோற்றம்
|
|
அக்களிப்பு
|
அகக்களிப்பு; மனமகிழ்ச்சி
|
|
அக்கறை
|
ஈடுபாடு; கருத்து; கவனம்
|
|
அக்கன்
|
தமக்கை; கருடன்; பிறவிக்
குருடன்; நாய்
|
|
அக்கா(ள்)
|
தமக்கை; முன்பிறந்தவள்;
மூதேவி
|
|
அக்காக்குருவி
|
குரலை மட்டும் கேட்கக்
கூடிய, எளிதில் பார்க்க முடியாத குருவி
|
|
அக்காணி
|
பெரிய உடல்
|
|
அக்காத்தான்
|
தான்றிமரம்
|
|
அக்கரடலை; அக்காரவடிசில்
|
ச(ரு)ர்க்கரை பொங்கல் வகை
|
|
அக்காரம்
|
ச(ரு)ர்க்கரை; வெல்லம்;
கரும்பு; சீலை; மாமரம்
|
|
அக்காரை
|
ஒரு வகை சிற்றுண்டி
|
|
அக்கானிர்
|
பதநீர்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக