Translate this site
ஞாயிறு, 8 ஏப்ரல், 2018
சனி, 7 ஏப்ரல், 2018
நம்மாழ்வார் பிறந்த நாள் நியூஸ் 7 தொலைக்காட்சி தொகுப்பு நிகழ்ச்சி
செவ்வாய், 13 மார்ச், 2018
பாரம்பரிய அரிசியின் மகத்துவம்
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
*2. மாப்பிள்ளை சம்பா அரிசி :*
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
*3. பூங்கார் அரிசி :*
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
*4. காட்டுயானம் அரிசி :*
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று
செவ்வாய், 12 டிசம்பர், 2017
நெய் மருத்துவ குணங்கள்
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி
ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி....
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.
Source: WhatsApp
வெள்ளி, 20 ஜனவரி, 2017
தாலி மஞ்சளில் கட்டுவது ஏன்?
நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .
அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!
#நம்_முன்னோர்கள்_ஒன்றும்_மூடர்கள்_அல்ல..!
திங்கள், 2 ஜனவரி, 2017
புதன், 5 அக்டோபர், 2016
கைப்பேசி மூலம் வங்கி இருப்பு அறிய
Dial * 99# to do basic Banking instantly. One can check balance for accounts, mini statement where the mobile number is registered & no internet required. Below are the direct codes for banks:
* 99* 42#- Punjab National Bank
* 99* 43#-HDFC Bank
* 99* 44#-ICICI Bank
* 99* 45#-AXIS Bank
* 99* 46#-Canara Bank
* 99* 47#- Bank Of India
* 99* 49#-IDBI Bank
* 99* 50#-Union Bank of India
* 99* 51#-Central Bank of India
* 99* 52#-India Overseas Bank
வெள்ளி, 30 செப்டம்பர், 2016
சில பொது அறிவு கேள்விகள்
💠 மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
💠 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.
💠 நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.
💠 மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
💠 நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
💠 நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
💠 ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
💠 வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
💠 மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
💠 கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
💠 ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
💠 பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
💠 நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
💠 ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
💠 ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.
💠 ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
💠 புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.
💠 சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.
💠 நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.
💠 ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.
💠 வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.
💠 ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.
💠 வளர்பிறை கோடுகள் மேல் நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.
💠 கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.
💠 கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.
💠 எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.
💠 "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.
💠 பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'
💠 அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.
💠 நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.
💠 குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23.
💠 வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
💠 அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்.
💠 செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்.
💠 சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்.
💠 பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்.
💠 தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்.
💠 பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்.
💠 திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்
💠 கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்
💠மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை.
💠பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்
💠 ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை
💠பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
💠 தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை.
சனி, 9 மார்ச், 2013
அ முதல் அக்கானிர் வரை
|
வார்த்தைகள்
|
பொருள்
|
|
அ
|
அந்த; அழகு; கடவுள்
|
|
அஃகம்
|
தானியம்; ஊறுநீர்; முறைமை
|
|
அஃகாமை
|
குறையாமை; சுருங்காமை
|
|
அஃகான்
|
அ என்னும் எழுத்து
|
|
அஃகுதல்; அஃகல்
|
குறைதல்; சுருங்குதல்;
நுணுகுதல்; வற்றுதல்; கழிதல்
|
|
அஃகேனம்
|
ஆயுத எழுத்து(ஃ); முள்ளில்லா பன்றி
|
|
அஃதன்று; அஃதான்று
|
அ
|
